Tuesday, October 28, 2014

தொழுகையின் அவசியம்

இஸ்லாமிய மார்க்கம் ஐந்து காரியங்கள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அவை: வணக்கத்திற்குறியவன் இறைவன் ஒருவனைத் தவிர எவருமில்லை. முகம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் இறைவனின் அடியாரும் தூதருமாவார்கள் என உறுதியாக நம்புவதும், தொழுகையை நிலை நாட்டுவதும், நோன்பு நோற்பதும், ஜகாத் கொடுப்பதும், சக்தி பெற்றவர்கள் ஹஜ் செய்வதுமாகும் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியுள்ளார்கள். 

அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின் உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ                                      நூல்கள்: புகாரி, முஸ்லிம்

"தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (அல்குர்ஆன் 30:31)

"நிச்சயமாக தொழுகை மூஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக விதிக்கப்பட்டுள்ளது" (அல்குர்ஆன் 4:103)

"நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது" (அல்குர்ஆன் 107:45)

"மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபி صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

ஏழு வயதானதும் குழந்தைகளுக்கு தொழ கற்றுக்கொடுக்க வேண்டும்

குழந்தைகள் ஏழு வயதை அடையும்போது தொழும்படி ஏவுங்கள் பத்து வயதை எய்தி விட்டால் அடித்தாவது தொழச் சொல்லுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்

ஏழு வயதையடைந்து விட்டால் குழந்தைக்கு தொழுகையை கற்றுக் கொடுங்கள் என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸப்ரா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத், தாரமி, தாரகுத்னீ

நபி صلى الله عليه وسلم அவர்கள் தமது மரண வேளையில் கூடத் தொழுகையைப் பேணுங்கள் என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: இப்னுமாஜ்ஜா

தொழாதவர் காஃபிராகி விட்டார்

(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைத்தல் குஃப்ர் இவற்றிற்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது என நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: முஸ்லிம்

தமக்கும், அவர்களுக்கும் (காஃபிர்களுக்கும்) உடன்படிக்கை தொழுகையாகும். யார் அதை விட்டு விடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என நபி صلى الله عليه وسلم கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதாرَضِيَ اللَّهُ عَنْهُ நூல்கள்: நஸயீ, திர்மிதீ, அபூதாவூத்

இத்தகைய முக்கயத்துவம் வாய்ந்த தொழுகையை நிறைவேற்றாமல் அக்கறையின்றி இருக்கும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு தொழுகையின் அவசியத்தை எடுத்துச்சொல்ல வேண்டியது நம்மீது கடமையாகும்.

தொழுகையை முஸ்லிம்கள் பலவாறாகத் தொழுகின்றனர். அவர்கள் தொழும் முறை சரிதானா என்பதை அறியாமலேயே தொழுகின்றார்கள். தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின், அத்தொழுகை அல்லாஹ்வின் தூதர் அவர்கள் தொழுதது போன்றுதான் அமைய வேண்டும். ஏனெனில்,

"என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்" என்று நபி صلى الله عليه وسلم அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: மாலிக் இப்னு அல்ஹுவைரிஸ் رَضِيَ اللَّهُ عَنْهُ நூல்: புகாரி,

No comments:

Post a Comment