Tuesday, October 28, 2014

தொழுகை ஓர் அறிமுகம்

உலகில் அல்லாஹ் மனிதனைப் படைத்ததின் நோக்கம்  தனக்கு மட்டும் இருந்து  தனக்கே முற்றிலுமாக அடிபணிய வேண்டும் என்பதற்காவே. அந்த அடிமைத்தன்மை மனிதனிடம் வெளிப்படுவதற்காக சில அமல்களை அவன் அவசியமாக்கியுள்ளான். அந்த அமல்களில் முக்கியமானது தொழுகையாகும்.
அந்த தொழுகையை முறைப்படி. முழுமையாக நிறைவேற்றும்போது   அல்லாஹ்வால் அது அங்கிகரிக்கப்பட்டு   நன்மைகளை பெற்றுத் தரும் நற்காரியமாக அமைந்து விடுகிறது. அதற்கு மாற்றமாக   முறை தவறி   முறைகேடாக செயல்படுத்தப்படுமானால் அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாததாக ஆகி விடுகின்றது. எனவே அல்லாஹ்விடத்தில் வெறும் தொழுகை எனும் ரிதியில் கவனிக்கப்படாது மாறாக   எத்தகைய தன்மைகளில் அது நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே முக்கியமாக கவனிக்கப்படும். எனவே தான் அல்லாஹ் தொழுபவர்களின் முடிவை இரண்டுவிதமாக சொல்லிக் காட்டுகிறான்.
தங்கள் தொழுகையில் உள்ளச்சத்துடன் இருக்கும் முஃமின்கள் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார்கள்.(23.12) 
தங்கள் தொழுகையில் கவனமற்றவர்களாக இருக்கும் தொழுகையாளிகளுக்கு கேடுதான்.(107.45) 
தொழுகையாளிகளில் சிலருக்கு வெற்றி கிடைக்கின்றது. சிலருக்கு நாசம் உண்டாகிறது. இரண்டுமே தொழுகையிலிருக்கும் தன்மையே பொறுத்தே அமைகின்றது. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி தொழுகையை நிறைவேற்றும்போது அது முழுமையானதாகவும் வெற்றி கொடுக்கக் கூடியதாகவும் அமைந்து விடுகிறது. தொழுகை பாவங்களை நீக்கி மனிதனை சுத்தப்படுத்தக்கூடியது என்பதால்   அந்த தொழுகையை நிறைவேற்றும்போது   வெளிப்படையாக எல்லாவிதத்திலும் சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். எனவே இடம்  உடை  சுத்தமாக இருப்பதுடன் உடலும் சுத்தமாக இருக்க வேண்டும். கடமையான குளிப்பையும் ஒளுவையும் பரிபூரணமாக செய்வது தொழுகை பரிபூரணவதற்குரிய முக்கிய வழியாகும். 

No comments:

Post a Comment